பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காண்டவ வனம் எரிந்த கதை

குருக்ஷேத்திரப் போர் முடிந்ததும் தருமபுத்திரர் அஸ்தினா புரத்தின் மன்னராகி விட்டார். ஒரு நாள் கிருஷ்ணரும் அர்ச்சுனனும் யமுனை நதிக் கரையில் அமர்ந்து மாலை இளங் காற்றை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தம் முடிந்த பிறகு ஒரே அமைதிதான். இது சப்பென்று இருந்தது. ஒரு பரபரப்பும் இல்லை, வீரச்செயலுக்கு ஒரு வாய்ப்பும் இல்லை.

அரசவையிலுள்ள புதிய மந்திரிகளையும் அறிஞர்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென, எதிரே நெட்டையாக ஒருவன் வரக் கண்டனர். பார்ப்பதற்குப் பெரிய மனிதனாக இருந்தான். - ஆனால் நோயாளியாகவும் மன வேதனைப்படுபவன் போலவும் தோன்றினான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் படாத பாடுபட்டான். அருகே வந்ததும், இரக்கத்தைத் தூண்டும் குரலில், “ஐயா பஞ்சத் தில் வாடியவன் நான், ஆகாரம் கொடுங்கள், ஆகாரம்,” என்றான்,

கிருஷ்ணனும் அர்ச்சுனனும் ஒரே குரலில், ஐயா உமது 'வயிறுமுட்ட உடனே உணவு அளிக்கிறோம். முதலில் சற்றுக்