பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவை எல்லாம் நெருப்பு நெருங்குவதை உணர்ந்தன. எப்படியாவது தப்பவேண்டும் என்று துடித்தன. சிலவற்றுக்குத் தலை பெரிது, கால்கள் பரவியிருக்கும்; சில பிராணிகளுக்கு ஒற்றைக்கண்தான்; சில பறவைகளுக்குச் செதிள் போன்ற சிறகும் நீண்ட நகங்களும் இருந்தன. பயத்தில் அலறியபடி சில மிருகங்கள் நேரே தீக்குள்ளேயே போய் விழுந்தன! உடல் எரிந்தபடியே அவை தரையில் விழுந்து புரண்டன. ஆனால் தீ அணைவதற்கு பதிலாக, காடெங்கும் பரவியது; அந்தப் பிராணிகளைை மறுபடி சூழ்ந்தது அலறித் துடித்துச் செத்தன. அவை,

அகன்ற இறக்கை விரித்த விசித்திரப் பறவைகள் கரிய , மேகம் போலே காட்டின் மேலே உயர எழும்பின. கிருஷ்ண