பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அவர்கள் மேன்மையை மறந்தான். "ஒரே மூச்சில் வனத்தையும் மீட்கிறேன்; கிருஷ் ணனையும் அர்ச்சுனனையும் வெல்கிறேன். மூன்று உலகத்திலும் நானே பெரிய வீரன் என்பதைக் காட்டுகிறேன்’ என்று சூள் உரைத்தான். - '.

இந்த முடிவுக்கு வந்ததும் இந்திரன் தீவிரமாகச் செயலில் இறங்கினான். தேவர் களைக் கொண்டு காண்டவ வனத்தின்மீது அடர்ந்த மேகங்களைப் பரப்பினான். பல காத தூரம் பரப்பினான். ஆணை யிட்ட வுடன் அடை மழை கொட்ட வேண்டும் என்பது ஏற்பாடு.

மேலே மேகம் படர்ந்தவுடன் கிருஷ்ண னும் அர்ச்சுனனும் கணக்கற்ற அம்புகளை அதன் அடியில் எய்தார்கள். அந்த அம்பு கள் மேகத்துக்குக் கீழே அடர்த்தியாகப் படர்ந்து, காட்டையே ஒரு போர்வை போலச் சூழ்ந்தன, எவ்வளவு அடர்த்தி

தெரியுமா?மழை கொட்டத் தொடங்கி