பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62




தபடி தட்சகனுடைய மனைவியையும் மகனையும் காப்பாற்ற வேண்டுமே. காண்டவ வனத்திலே இந்திரன் விட்டிருந்த விசித்திரமான பறவைகளையும் மிருகங்களையும் அவனுக்காக தட்சகன் பார்த்து வந்தான் அல்லவா? '.

தட்சகனின் மனைவி யானைமீது இந்திரனைப் பாாத்ததும், தீ நடுவே பாய்ந்து பறந்தாள். அவளது அழகிய மேனி தீயில் பொசுங்கலாயிற்று. அழகு மிக்க அந்தப் பெண் பாம்பு ஆகாயத்திலே எழக் கண்டதும் அர்ச்சுனன் அதை அம்பால் எய்யக் குறி வைத்தான். ஆனால் கிருஷ்ணன் அவனைத் தடுத்தார். தட்சகனின் மனைவியே! உன் மகன் எங்கே? தெரியவில்லையே. நீ மட்டும் தப்பித்துக்கொண்டு உன் மகனை இங்கே சாகவிடுகிறாயா?’ என்று கேட்டார்.

“என் மகன் என் வயிற்றில் இருக்கிறான். நெருப்பிலிருந்து அவனைக் காப்பதற்கு அவனை நான் விழுங்கிவிட்டேன்.