பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

குறிப்பிடுகிறீர்கள்?" என்று அமைதியாகக் கேட்டாள் சாவித்திரி.

இதைக் கூறும்போது அவளுக்கு இருந்த துணிச்சலைக் கண்டு பெரியவர் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

"ஏனம்மா, இது தெரிந்துமா நீ அவனை மணக்க விரும்புகிரறாய்?’ என்று நடுங்கும் குரலில் தந்தை கேட்டார்.

"அது சரி. உனக்கு இது எப்படித் தெரிந்தது? நீ அவன் பெற்றோரைச் சந்தித்திருக்கிறாயா? என்று கேட்டார் நாரதமுனிவர்.

"ஆமாம். பக்திமிகுந்த அவருடைய அன்னைதான் எனக்கு இதைச் சொன்னாள். அவர் பிறந்ததும் அவருடைய ஜாதகத்தைக் குறித்த சோதிடர்கள் இது பற்றி எச்சரித்தார்களாம். ஆனால் அவருக்கு இதுவரை இது தெரியவே தெரியாதாம். அவரது பெற்றோர்கள் இவ்வளவு காலமாக இதை இரகசிய மாகவே வைத்திருக்கிறார்கள். இதுவே அவர்களுக்குப் பெரும் கவலையாக இருக்கிறது.”

இதைக் கேட்ட நாரதருக்கு அவரை அறியாமலே சாவித்திரியிடம் ஒரு மதிப்பு ஏற்பட்டது. "ஏனம்மா, சத்தியவானைக் கலியாணம் செய்துகொண்டால் உன் கதி என்ன ஆகும் என்பது உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.

"தெரியுமே." என்று தயங்காமல் சொன்னாள் சாவித்திரி.

"உனக்குப் பயமாயில்லையா???

"பயமா? இல்லவே இல்லை. ஆனால் வருத்தமாக இருக்கிறது. வாழ்வும் சாவும் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை மட்டுமே வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகின்றனவா? ஒருவர் வாழ்வினால் மற்றவர் வாழ்வில் மாற்றம் ஏற்படலாம் அல்லவா? நான் அவரை மணந்தால் ஒருவேளை என் விதி அவரைக் காப்பாற்றலாம். என்ன நட்க்கும் என்பதோ, அல்லது எதை நடக்காமல் தடுக்கலாம் என்பதோ யாருக்குத் தெரியும்??

"அசுவபதி அரசே! இந்தத் திருமணத்திற்கு இனி எவ்விதத் தடையும் கூடாது. உடனே இவள் திருமணத்தை நிச்சயித்துவிடுங்கள்" என்று நாரதர் கூறி எழுந்தார்.சாவித்திரி அவரிடம் விடைபெற வந்து வணங்கியபோது, "இளவரசியே, நானே ஒரு பிரம்மசாரி. ஆனாலும் என் ஆசி