உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எக்கோவின் காதல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

அப்படியேதானே இருக்கிறது. ஒரு சல்லிகூட உயரவில்லை! ஏதோ அவர் ஊட்டிய அறிவாலும் அன்பாலுந்தான் நாங்கள் கவலையற்று இடுக்கண் களைந்து வாழ்கிறோம்.

கடவுட் கொள்கையைப் பற்றியும் அடிக்கடி நாங்கள் பேசிக் கொள்வோம். தன் முயற்சியில் நம்பிக்கையிழந்தவரும், சுயநலத்தாருந்தான் அந்தச் சொல்லைத் துணைக்கழைப்பார்கள். பாரதியார் கூட “சிவலோகம் வைகுந்தம் என்பதெல்லாம் பித்தர்களின் கூற்று” என்று சொல்லியிருக்கிறார். இப்போது உயிரோடுள்ள - சென்னையிலேயிருக்கின்ற வ.ரா. என்ற அறிஞர் கூட, கடவுள், விதி என்பதெல்லாம் "சுத்தப்பொய்” என்று கூறுகிறார்

"கடவுள் நரகம் என்பதெல்லாம் மக்களை ஏய்ப்பதற்காக ஒரு கூட்டத்தால் அமைக்கப்பட்ட எழுத்துக் கூட்டங்கள்” என்று எங்கோ படித்த நினைப்பிருக்கிறது. இப்படியெல்லாம் அறிஞர்கள் தன்னம்பிக்கையில்தான் உறுதி வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை எல்லாம் எழுதினால் நீ என்னைப்பற்றித் தவறான எண்ணங் கொள்வாய் என்று இந்த அளவுடன் நிறுத்துகிறேன்.

வணக்கம்.

காக்கை

அம்மா!

இப்பொழுது எழுதும் இந்தக் கடிதம் வீட்டிலிருந்து எழுதவில்லை. சிறைக்குள்ளிருந்து எழுதுகிறேன். அவர் ஒரு பக்கம் சிறையுள் கிடக்கிறார். நான் ஒரு பக்கம் அடைபட்டுக்