பக்கம்:எக்கோவின் காதல்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

விரைந்து நடங்கள்” என்ற ஆணை தலைவரிடமிருந்து வந்தது.

“அடைந்தே தீருவோம் திராவிடநாடு” என்ற பேரொலியோடு படைவிரைந்தது.

கண்ணாடித் துண்டுகள் நிரம்பிய போத்தல் ஒன்று குறி பார்த்துக் குதிரைவீரன் தலையில் தாக்கியது.

"அம்மா!” என்று தலையில் கை வைத்தான் வீரன். குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டான். விழுந்ததும் பாட்டில் வந்த திசையை நோக்கினான். கிருஷ்ணன் மறைவதைப் பார்த்து விட்டான். தலையிலிருந்து பீறிட்டுக் கொண்டுவரும் இரத்தம் அவன் அணிந்திருந்த கருப்புச் சட்டையைச் சிவப்புச் சட்டையாக மாற்றியது.

சிலர் அவனருகில் ஓடிவந்து “தலைவரே! உடனே விடை தாருங்கள். அந்தக் காலிகளைப் பழிக்குப்பழி வாங்குகிறோம். அவர்கள் எலும்பைச் சூறையாடி விடுகிறோம். விடை தாருங்கள்” என்றனர்.

"தோழர்களே! வேண்டாம்; நமது குறிக்கோள் அதுவன்று. நம்மைத் தாக்கியவர்களும் நமது இனத்தவரே. பதிலுக்காக நாமும் அவர்களைத் தாக்கினால் நட்டம் யாருக்கு? பதறாதீர்கள். புறப்படுங்கள் நாம் அடைய வேண்டிய இடத்திற்கு”- என்று சொல்லி விட்டு அந்த வீரன் எழுந்து நடந்தான்.

"இந்த அர்ச்சுனன் எப்பொழுதும் இப்படித்தான். நம்மை எதிரி தாக்கும்பொழுதும் நாம் பணிந்து சென்றால் கோழை என்றல்லவா எண்ணுவார்கள்” என்று சில இளைஞர்கள்