பக்கம்:எக்கோவின் காதல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல்

❖கவியரசர் முடியரசன்

115

முணுமுணுத்துக் கொண்டே திருப்பிய கொடியை மீண்டும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு அணியாகச் சென்றடைந்தனர் கூட்டம் நடக்கும் இடத்தை.

கொடியேற்றி வைக்க வந்திருந்த மதுரம் அடிபட்ட அர்ச்சுனனைப் பார்த்தாள்; பதறிவிட்டாள். செய்தியைக் கேட்டு அறிந்து கொண்டாள். முதல் நாள் ஏற்பட்ட தோல்வியால், என்ன பேசுவதென்று தோன்றாமல் வந்திருந்த மதுரத்தின் நெஞ்சம் கொதித்தது: குதித்தெழுந்தாள்.

“தலைவர் களே! தோழர்களே! திராவிடர் கழகக் கொடியை ஏற்றுமுன் அதைப்பற்றி இரண்டொரு சொற்கள் கூற ஆசைப்படுகிறேன். இக்கொடி திராவிடரின் இழிவு நிலையை அறிவுறுத்தவே அமைக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இழிவு நிலையை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் நடுவில் சிவப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிவப்பு சாதாரணச் சிவப்பன்று. இரத்தச் சிவப்பு. தாலமுத்து - நடராசன் சிந்திய சிவப்பு அது. இதோ நம் கண் முன் காட்சியளிக்கும் வீர அர்ச்சுனன் சிந்திய இரத்தச் சிவப்பு அது. கருங்காலிகள் வீசிய கல்லெறியால் ஏற்பட்ட காயங்களிலிருந்து பெரியார் சிந்திய இரத்தச் சிவப்பு அது. (கைதட்டல்) கை தட்ட வேண்டாம். இப்படிப் பல வீரர்கள் சிந்திய இரத்தத்தால் ஏற்பட்ட சிவப்பு அது. இது மட்டும் போதாது நமது இழிவு நிலை நீங்க. இன்னும் சிந்த வேண்டும்; இரத்தம் மட்டுமன்று, உயிரையுங்கூடத்தான், அப்படிச் சிந்தினால்தான் அந்தச் சிவப்பு இன்னும் விரிவடையும். விரிய விரியக் கருப்பு நீங்கிச் சிவப்புக் கொடியாக மாறும். அவ்வாறு