பக்கம்:எக்கோவின் காதல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

127

“தூங்கிவிட்டானோ! கண்ணப்பா! மணி ஒன்பது ஆகி விட்டது. இன்னும் சாப்பிடாமல் என்ன படிப்பு வேண்டி யிருக்கிறது? சாப்பிட்டு விட்டுப் படிக்க கூடாதோ?” என்று சொல்லிக் கொண்டே கண்ணப்பன் அறையை நோக்கி வந்தாள் அவன் தாய் இலட்சுமி.

நாற்காலியில் சாய்ந்த வண்ணம் சிந்தனையில் மூழ்கியிருந்தான் அவன். முகம் கறுத்திருந்தது. கவலையின் குறிகள் நன்கு புலப்பட்டன மின்சார வெளிச்சத்தால்.

“கண்ணப்பா!”

“ஏன் அம்மா!” என்று திடுக்கிட்டு எழுந்தான்.

“சாப்பிடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“பசியில்லையம்மா; சாப்பாடு வேண்டாம்'

“ஏண்டா தம்பி ஒருமாதிரியாயிருக்கிறாய்? உனக்கென்ன கவலை? அப்பா ஏதாவது சொன்னாரா? உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் என்னை கேட்கப் படாதோ?'

“இல்லையம்மா, அப்பா ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு உடம்புக்கு ஒரு மாதிரியாயிருக்கிறது. பசியும் இல்லை”

“இல்லையில்லை. ஏதோ வருத்தமாயிருக்கிறாய், நன்றாகத் தெரிகிறது. நீ சாப்பிடாவிட்டால் எனக்குச் சாப்பிட மனம் வருமா? வாப்பா! கொஞ்சமாவது சாப்பிடு. என்ன கவலை என்று தான் சொல்லேன். என்னிடம் சொல்ல ஏன் மறுக்கிறாய்? எனக்கு நீ ஒரே பிள்ளை. உன்னைச் செல்வமாக வளர்த்து வருகிறேன். உன் மனம் இப்படிக் கலங்குவதைக்காண என்-