பக்கம்:எக்கோவின் காதல்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்


• கலப்புத் திருமணத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு இருந்து விடாமல் தாமும் கலப்புத் திருமணம் செய்து கொண்டு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்துவித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித்தந்ததன் மூலம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்தார்.

• காரைக்குடியில் மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார் (1949)

• 'முடியரசன்........எனக்குப் பின் கவிஞன்' எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப் பெற்றார் (1950)

• இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் வழக்கு (1965)

• கவிஞரது கவிதைகள் பல சாகித்திய அகாதமியால் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கன்னடத்திலும், உருசிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

• கவிஞரது நூல்கள் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக் கழகங்களில் இவர்தம் நூல்கள் ‘முனைவர் மற்றும் எம்.ஃபில்’ பட்டத்திற்காகவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

• 'கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம்’ என்னும் பெயரில் புலவர் தி.மு. அரசமாணிக்கம் என்பார், ஈரோட்டில் மன்றம் அமைத்துத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்.