பக்கம்:எக்கோவின் காதல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

உன் பாடல்களுக்கு மதிப்புக் கிடைத்தது மக்களிடமிருந்து. என் கனவு நனவாயிற்று. பாராட்டுக் கூட்டத்திலே நான் சொல்கிறபடியே பேசி விடு. அது தான் நீ எனக்குச் செய்யவேண்டிய கைம்மாறு”.

கடல்போன்ற கூட்டம். பெருத்த கைதட்டலுக்கிடையே எழுந்து நின்றான் கண்ணன் சிங்க ஏறுபோல.

"தோழர்களே! அறிஞர்களே!”

எனக்கு வரவேற்பும் பாராட்டும் அளித்துப் பெருமைப் படுத்திய உங்கள் அனைவருக்கும் வணக்கம், கடலில் கவிழ்ந்ததும் கட்டு மரத்துண்டு ஒன்றைப்பிடித்த வண்ணம் மிதந்து கொண்டிருந்தேன். அப்பொழுது சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று என்னைக் காப்பாற்றிச் சிங்கப்பூரில் கொண்டு சேர்த்தது. போர் முடிந்ததும் என் நாட்டையும் என் இனத்தையும் காண்கிறேன். மீண்டும் உங்களுக்குத்தான் எனது மூச்சு வணக்கம்.”

கண்ணன் நான் கூறியபடியே பாராட்டுக் கூட்டத்திலே பேசிவிட்டான். அப்பப்பா எவ்வளவு புகழ்மாலைகள்!

பிறகு நாட்டுமக்கள் “நிதியளிப்பு” “படத்திறப்பு” அனைத்தும் செய்யத் தொடங்கினர் என் நண்பன் கண்ணனுக்கு .

கவிஞனுக்குப் புகழ் வளர்ந்து கொண்டிருந்தது. அன்று வறுமையில் வாடிய கண்ணன் இன்று செல்வத்திலே புரள்கிறான். “இளமையை வறுமையிலே நனைத்து நனைத்துக் கெடுத்து விட்டேன். பணம் மக்களின் நன்மைக்குத் தானே. இதையறியாமல் முன்பெல்லாம் பணம் கூடாது