பக்கம்:எக்கோவின் காதல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

இவன் வந்து சேரும் போது திருச்சிராப்பள்ளி வண்டி புறப்பட்டு விட்டது. அந்த வண்டியில் இடமும் இல்லை . அதனால் அடுத்த வண்டிக்குக் காத்துக்கொண்டிருந்தான்.

உட்கார்ந்திருந்தபொழுது அவன் உள்ளம் ஒரு நிலையில் இல்லை. தேவகியைப்பற்றிய எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. நிலையத்தில் வேறு பல ஊர்களுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருக்கும் கரிவண்டி, 'பெட்ரோல்' வண்டி இவற்றின், இரைச்சலைக் காட்டிலும் அதிகமாக இரைந்துகொண்டிருந்தது அவன் இதயம். பல வண்டிகள் உள்ளே நுழைவதையும், பல வண்டிகள் வெளிக் கிளம்புவதையும், மக்கள் ஓடோடி வந்து நெருக்கியடித்துக் கொண்டு வண்டியில் ஏறுவதையும் பார்க்கப் பார்க்க இவனுக்கு எரிச்சலாக இருந்தது. இவன் எதிர்பார்க்கும் வண்டியைக் காணவில்லையல்லவா; அதனால்தான். 'சனியன், நாம் எதிர்பாக்கும்போது தான் வராது. நாம் சும்மா இருக்கும் போது திருச்சிராப்பள்ளி வண்டி நிமிடத்திற்கொன்றாக ஓடும்' என்று அங்கலாய்த்துக் கொண்டான். வண்டி மணிப்படிதான் ஓடுகிறது. இவனுடைய அவசரம் அப்படி எண்ணும்; படி செய்கிறது. தேவகிக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று எண்ணுவான். மனம் 'குபீர்' என்னும்' 'சேச்சே, அப்படியெல்லாம் நேராது. ஏன் நாமாக அலட்டிக் கொள்ளவேண்டும்?' என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வான்.

இவ்வாறு எண்ணிக்கொண்டேயிருந்தவன் சலிப்போடு எழுந்து அங்குமிங்குமாக நடந்து பார்த்தான். அப்பொழுதும் 'கார்' வரவில்லை . 'என்னடா இது பெரிய தொந்தரவாய்ப் போச்சு; சனியன் பிடித்த 'மானேஜர்' முன்னாடியே விடுமுறை