எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
147
தந்திருந்தால் இரயிலிலாவது போய்த் தொலையலாம்' என்று எண்ணிக்கொண்டே 'சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான்.
- மாய வாழ்வு சதமாகுமா-மானிடனே நீ
- மனததை அலைய விடலாகுமா
என்று ஒரு பிச்சைக்காரி பாடின பாட்டு அவன் செவியில் - வந்து மோதியது. அவனுக்கு அந்த ஓசை பெரிய துன்பத்தைக் கொடுத்தது. அவன் அருமை மனைவி தேவகியைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் போது 'அபசகுனம்' போல இப்படிப் பாடுகிறாளே என்று அவளை வெறுத்தான். ஆனால் அவளுடைய தோற்றம் அவளுக்காக இரக்கம் காட்டச் செய்தது. கிழிந்த கந்தலாடை உடுத்தியிருந்தாள். குலைந்து கிடந்த கூந்தல் அவளுடைய முகத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அதை ஒதுக்கிவிட்டுக்கொண்டே பாட்டுப்பாடி ஒவ்வொரு காரிலும் கைகளை நீட்டிப் பிச்சை கேட்டு வந்தாள். இடுப்பில் சுமார் மூன்று வயதுக் குழந்தை ஒன்றும் இருந்தது. அவள் பாடிய பாட்டு, பிச்சை கேட்பதற்காகத்தான் என்றாலும். அந்த ஒலி அவளுடைய இதயத்தைப் பலமாகக் கௌவிக் கொண்டிருந்த சோகத்தின் எதிரொலியாக இருந்தது. அந்தக் காட்சியும் அந்தப் பாட்டும் அரங்கசாமியை, தன் சொந்த வாழ்வைப் பற்றிய நினைவிலிருந்து வேறெங்கோ இழுத்துச் சென்றன. சிந்தனை வீசிக்கொண்டிருந்தது. 'இந்தப் பிச்சை வாழ்வு நம் நாட்டைவிட்டு என்று தொலையுமோ? இதற்கெல்லாம் காரணம் அரசாங்கந்தான். அரசாங்கம் என்ன செய்யும்? அரசாங்கம் எவ்வளவு பிச்சைக்காரர்களைத்தான் கவனிக்க