பக்கம்:எக்கோவின் காதல்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

பிரஜை தான் இந்த நாட்டில்! இதைப்போல எத்தனையோ குழந்தைகள் திரிகின்றன. இங்கே இதையெல்லாம் கவனிப்பவர் யார்? இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்த நாடு என்னாவது? பிச்சைக்கார நாடாகத்தானே ஆகும்! தனி மனிதன் வாழ்வுதானே கவனிக்கப்படுகிறது. சமுதாயத்தின் வாழ்வை அதன் போக்கைக் கவனிப்பது யார்? அதைக் கவனிக்காத நாடு என்றும் உருப்பட முடியாது; அந்த நாட்டின் எதிர்காலம் சூனியமாகத்தான் இருக்கும்.

அரங்கசாமி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 'ஐயோ! பாவம்! சிறுவயதுப் பெண்ணாக இருக்கிறாள். யாரோ அனாதை' என்று எண்ணிக்கொண்டே உருண்டு விழுந்த குழந்தையின் பக்கம் அவன் பார்வையைத் திருப்பினான். குழந்தை அழுதுகொண்டிருந்தது. குழந்தை கையில் ஒரு பழைய 'மணிபர்சு' இருந்தது. அதை மீண்டும் நன்றாக உற்றுப் பார்த்தான். மேல் புறத்தில் சிறு புகைப்படம் ஒன்றும் இருப்பதைப் பார்த்தான். அவன் மனம் 'சுரீர்' என்றது.

மறுபடியும் அந்தப் பிச்சைக்காரியைக் கூர்ந்து பார்த்தான். அப்படியே செயலற்றுச் சிலைபோல நின்று விட்டான். மனம் வெடித்துவிடும் போலிருந்தது. கண்கள் கலங்கி நீர் ததும்பிக் கொண்டிருந்தன. அதற்கு மேல் அவனால் அங்கு நின்றுகொண்டிருக்க முடியவில்லை. திரும்பி வந்து முதலில் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்துவிட்டான். எங்கிருக்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை . 'சிகரெட்'டைப்' பற்ற வைத்தான். 'சிகரெட்'டிலிருந்து வெளிப்படும் புகை அவன் முகத்தை மறைத்தவண்ணம் சுழன்று சுழன்று போய்க்கொண்டிருந்தது. புகையைப் பார்த்த வண்ணம்