பக்கம்:எக்கோவின் காதல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖ கவியரசர் முடியரசன்

153

உள்ளங்கள் இணைந்து விட்டன. ஒருவர்க் கொருவர் உள்ளங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

ஒற்றையடிப் பாதையில் வண்டி வரும் சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்டுப் பிரிந்து விட்டார்கள். பின்னர், தவறாமல் ஒவ்வொரு ஞாயிறு தோறும் இவர்களுடைய இன்ப விளையாட்டு நடந்து கொண்டே யிருந்தது.

அரங்கசாமி காதலில் வெற்றி பெற்றதைப் போலவே தேர்விலும் வெற்றி பெற்று விட்டான். மதுரைக்கு மேல்படிப்புப் படிக்க அனுப்புவதற்கு அவன் தந்தை ஏற்பாடு செய்தார். விடைபெற்றுக் கொள்ளத் தன் காதலியைத் தேடிச் சென்றான் அரங்கசாமி. பொன்னம்மாள் வழக்கம்போல வரவேற்றாள்.

“மாமா சந்தைக்குத் தானே போயிருக்கிறார்?” என்று அரங்கசாமி கேட்டான்.

“ஆமாம்” என்றாள் அவள்.

“பொன்னம்மா! நான் மேல் படிப்புக்காக மதுரைக்குப் போகிறேன். அதுவும் நாளைக்கே” என்று சொன்னான்.

"நன்றாகப் போய் வாருங்கள்” என்றாள். “ என்ன! நான் போவதில் உனக்கு மகிழ்ச்சிதானா, என்று வியப்புடன் கேட்டான்.

“வருத்தம் என்றால் நின்றாவிடுவீர்? உங்கள் அப்பா விடவேண்டுமே? அதுவுமல்லாமல் படிக்கப் போவதை வேண்டாமென்று சொல்லலாமா?” என்று சொன்னாள் பொன்னம்மாள்.