பக்கம்:எக்கோவின் காதல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

157

அவருடைய கோபத்தை மீறவும் முடியாதுபோல் தோன்றுகிறது. என்ன செய்வதென்றே எனக்குத் தோன்றவில்லை” என்று சொன்னான்.

“அப்படியானால் நான் என்னாவது? என் மாமாவும் கோபக்காரர்தானே! நான் இப்போது இரண்டு மாதம் தலை முழுகாமல் இருக்கிறேன். இந்த நிலையில் என் வாழ்வு எப்படியாவது மாமாவுக்குத் தெரிந்தால் வெட்டி ஆற்றில் விட்டுவிடுவாரே! அது உங்களுக்குச் சம்மதந்தானா?” என்று அழுது விட்டாள்.

அரங்கசாமி பேசாமலிருந்தான். அவனுக்கும் அவளை அந்த நிலையில் கைவிட மனமில்லை. என்னென்னவோ எண்ணினான். கடைசியாக எங்காவது ஓடி விடலாம் என எண்ணினான். ஓடி என்ன செய்வது? திடீரென்று எங்கே வேலை கிடைக்கும்? வேலையில்லாமல் இருவரும் திண்டாடுவதா என்ற கேள்விகள் குறுக்கிட்டதால் அந்த எண்ணத்தையும் விட்டு விட்டான். கடைசியில் அவன் தந்தைக்குப் பணிவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டான். அதனால் அவன் ஒன்றும் வாய்திறக்கவில்லை. இருந்தாலும் அவன் கண்கள் ஒவ்வொரு சொட்டாக நீரை உதிர்த்துக்கொண்டிருந்தன.

"என்ன பேசாமல் இருக்கிறீர்கள்; இதற்குத்தானா உங்களை நம்பினேன்? என்னையே கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னீர்களே! இது தான் உங்கள் காதலா? என் காதல் வெறும் மணிபர்சு அல்ல, என்றும் புதுமெருகோடிருக்கும் - கிழிந்து விடாது, என்றீர்களே! இதோ அதற்குள் கிழிந்து விட்டதே! கிழிந்தது மட்டுமல்ல- மீண்டும் தைக்க முடியாத படி சுக்கு நூறாகி விட்டதே! இது தானா