பக்கம்:எக்கோவின் காதல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

காதல் ? உங்களைச் சொல்லிப் பயன் என்ன? என் அறியாமை! பெரியோர்கள் பார்த்துச் செய்திருந்தால் இப்படியாகுமா? என் இளமைப் பருவத் துடிப்பினால் உங்கள் சொற்களை யெல்லாம் உண்மை என்று நம்பி ஏதோ காதல் என்ற பெயரால் நானும் கட்டுப் பட்டுவிட்டேன். நீங்களும் பருவக்கோளாறுகளுக்கு ஆளானீர்கள்! கலியாணத்துக்கு முன்னால் ஏற்படும் காதலுக்கெல்லாம் இந்தக் கதிதான்! இதை எத்தனை சினிமாவில் பார்த்தேன். பார்த்தும் அது படம் என்று உதாசீனம் செய்து விட்டேன். முதலில் கலியாணம், பின் காமம், அதற்குப் பிறகு , தான் காதல் என்பதை இப்போதுதான் அறிகிறேன். அப்படித் தோன்றும் காதல்தான் நிலைபெற முடியும் ! என்பதையும் தெரிந்துகொண்டேன். நாம் இருவருமே, இளமைப் பருவத்தில் தவழ்ந்து கொண்டிருக்கிறோம். எதையும் ஆராயாமல் காதல் என்ற பெயரை வைத்துக் கொண்டு விளையாடி விட்டோம்” என்ற சொற்களையும் கண்ணீரையும் உதிர்த்துக் கொட்டினாள். உணர்ச்சி வசத்தில் அகப்பட்டிருந்த காரணத்தால் அவளையறியாமல் அவள் உள்ளத்திலிருந்து ஏதேதோ கருத்துகளை அள்ளி வீசினான்.

அப்பொழுதும் அவன் பேசவில்லை . அவனால் என்ன பேச முடியும்?

"சரி; உங்கள் விருப்பம் போல் நடந்துகொள்ளுங்கள். இனிமேல் நான் என் மாமா முகத்தில் விழிக்க முடியாது. எனக்கு ஆறு,கிணறு தான் சதம்” என்று சொல்லிக் கொண்டே படுக்கையில் விழுந்து விம்மி விம்மி அழுதாள்.

அரங்கசாமி அப்பொழுதும் அசையாது நின்று கொண்டிருந்தான். வண்டி வரும் சத்தம் கேட்டது. அரங்கசாமி போய்விட்டான். பொன்னம்மாளும் முகத்தைத் துடைத்துக்