பக்கம்:எக்கோவின் காதல்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

தடவை வெளிவந்த ‘உடைந்த ஒடு’ உங்கள் அறிவின் பரப்பையும் அதன் கூர்மையையும் நன்கு புலப்படுத்துகின்றது.

இங்ஙனம்,
உங்களிடம் அன்புள்ள,
மல்லிகா.

இதைப் படித்து முடித்துவிட்டுக் கைகளைத் தலைப் பக்கம் அணையாக வைத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.

எக்கோ 'புரட்சி’ என்ற இதழில் அடிக்கடி எழுதி வரும் ஓர் எழுத்தாளன். அவனுடைய கட்டுரைகளும், கதைகளும் உயிரோட்டமுள்ளவை. அரசியல் பொருளியல் முதலிய துறைகளில் மனிதன் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதை எடுத்துக் காட்டி, எதிர்காலத்தில் நாட்டின் நிலை எவ்வாறிருக்க வேண்டும் - அரசியல் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் காரசாரமாக எழுதப்படும் கட்டுரைகளை, அரசியலில் மாறுபட்ட கருத்தினரும் பாராட்டுவர். சமுதாய அடிப்படையில் எழுப்பிய அவன் கதைகள் வைதீக மனப் பாங்கினரையும் இளகச் செய்துவிடும். அவன் நடையில் தமிழ் கொஞ்சி விளையாடும். இவன் எழுத்து வன்மையைப் பாராட்டிப் பாராட்டிக் கடிதங்கள் வந்து குவியும். அப்படிப் பாராட்டி எழுதுபவர்களிலே மல்லிகாவும் ஒருத்தி. அவள் திருச்சிக் கல்லூரியிலே பயின்று கொண்டிருப்பவள். நல்ல அழகும் பண்பும் உடையவள். அவளுடைய பாராட்டுக் கடிதம் தவறாமல் வாரந்தோறும் வந்துவிடும்.

ஒரு முறை அக்கல்லூரிக்கு எக்கோ அழைக்கப் பட்டிருந்தான். அவன் அங்கே சென்று சொற்பொழி