பக்கம்:எக்கோவின் காதல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

23

விட்டேன். அவளும் தந்தையிடம் சொன்னாள். இருவரும் முதலில் சிறிது வருத்தப்பட்டாலும் எக்கோ எங்கள் மாப்பிள்ளையா என்று மகிழ்ந்து வியந்தனர்.

நீங்கள், வரப்போகும் பொங்கலுக்கு இங்குக் கட்டாயம் வரவேண்டும். என் பெற்றோரும் விரும்புகின்றனர். ஆதலின் உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம்.

உங்கள் துணைவி
மல்லிகா

அக்கடிதத்தில் கண்டபடி எக்கோ பொங்கலுக்கு முதல் நாள் சென்னையிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தான். அவனை எல்லோரும் உள்ளன்புடன் வரவேற்றனர். மல்லிகாவின் தோழிகள் பலபேர் வந்திருந்தனர், எக்கோவைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால். வந்தவர்களுக்குள் ஒருத்தி, ‘மல்லிகா எழுத்தாளர் எக்கோவின் காதலி; இனிமேல் அவளுக்கென்னடி குறைச்சல்! அவள் பேனா முனையில் நடனமாடும் மயில்’ என்று கேலி செய்தாள்.

மற்றொருத்தி ‘நடனம் ஆடும் மயில் அல்லடி அவள், போராடும் புலி!’ என்றாள்.

இவ்வாறு அன்றிரவு வேடிக்கையும் கேளிக்கையுமாகக் கழிந்தது.

காலைக் கதிரவன் செவ்வொளி வீசிக் கொண்டு தோன்றினான். அந்தத் தோற்றம், மக்கள் உரிமைக்குப் போரிட்டு இரத்தந்தோய்ந்த உடலுடன் தோன்றும் வீரனைப் போலக் காட்சி யளித்தது. எக்கோவிற்கு அவன் உள்ளத்தில்