பக்கம்:எக்கோவின் காதல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்


ஏதோதோ எண்ணங்கள் மோதி மோதிப் புரண்டு கொண்டிருந்தன.

'எழுந்து வாருங்கள் குளிப்பதற்கு; விரைவில் குளித்து விட்டுப் புத்தாடையை உடுத்திக்கொள்ளுங்கள்; பொங்கலும் அதுவுமாக இன்னும் படுக்கையில் ......' என்று அழைத்தாள் மல்லிகா.

'பொங்கல்! எனக்கா பொங்கல்! மக்களுடைய சமுதாயத்திலே நல்வாழ்வு - புதுவாழ்வு மலரவேண்டு மென்று கனவு கண்டுகொண்டிருக்கும் நானா பொங்கல் விழாக் கொண்டாடவேண்டும்? என் மன அடுப்பிலே மூட்டிவிடப்பட்ட புரட்சித் தீயால் என் இரத்தம் பொங்கிக்கொண்டிருக்கிறது. அதுவே போதும். எங்கு நோக்கினும் வறுமை, பொருளியல் அடிமை, சாதிமத அடிமை இவை குடிகொண்டிருக்கின்றன. மனிதன் வாழ்வதற்கு வீடின்றி, விலங்கொடு விலங்காய் வாழ்கிறான் - மடிகிறான். அறியாமை இருள் முடிக் கவிந்து கொண்டிருக்கிறது. இக்கோரமான காட்சியைக் கண்டு கொண்டு துடிக்கின்ற உள்ளத்திலே பொங்கலுக்கேது இடம்? புரட்சி இதழில் என்னுடைய கட்டுரையைப் பார்க்க வில்லையா நீ? அவ்வாறு எழுதிய நான் விழாக் கொண்டாடுவதா? மனிதன் எப்பொழுது எல்லா உரிமையும் பெற்று மனித வாழ்வு வாழ்கிறானோ அன்றுதான் என் போன்றவனுக்கு விழா! அதற்காகப்பாடுபடுவதே என் முயற்சியாக இருக்கும். நீ வேண்டுமானால் விழாக் கொண்டாடு', என்று தன் உள்ள வேதனையை அப்படியே கொட்டிவிட்டான்.

'இதற்காகவா இவ்வளவு பேச வேண்டும்? வேண்டாமென்றால் வேண்டாம். நீங்கள் விரும்பாததை நான் மட்டுங் கொண்டாடவா? இந்தச் சிறு செயலிலே நான் வேறுபட்டால்