பக்கம்:எக்கோவின் காதல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்


இந்த அறியாமை தொலையும் வரை சேற்றில் நெளிந்து திரியும் புழுவாகத்தான் மக்கள் இருக்க முடியும். எப்பொழுது இவர்கள் விடுதலைப் பறவைகளாகப் பறந்து திரியப் போகிறார்களோ!’ என்று தனக்குத்தானே நொந்து கொண்டு மறுபடியும் மாடிக்குச் சென்றுவிட்டான்.

மல்லிகா, ஏதோ சில தின்பண்டங்களைக் கொண்டு வந்தாள். ‘நல்ல சமயத்தில் வந்தாய் மல்லிகா, அந்த அறையில் அழுதுகொண்டிருந்த பெண் யார்?’

‘அவள் என் தங்கை’

‘அவள் ஏன் அழுதாள்?’

‘அவள் வாழ்கை, பனிப்படலங்களால் சூழப்பட்ட நடுக்க மயமான துன்ப வாழ்க்கை. அதனால் அவள் அடிக்கடி அப்படி அழுதுகொண்டிருப்பாள்’

‘எனக்கொன்றும் விளங்கவில்லையே! உன் தங்கை என்கிறாய்! துன்ப வாழ்க்கை என்கிறாய்! குழப்பமாக இருக்கிறது; சற்று விளங்கச் சொல்’

‘அவள் விதவை’

‘விதவையா?!’ வியப்போடு வெளிவந்தது இந்தச் சொல்.

‘ஆம், விதவைதான். எனக்குத் திருமணம் வேண்டாம், படிக்கவேண்டும் என்று நான் சொல்லிவிட்டதால் என் தங்கைக்குத் திருமணம் செய்தார்கள். ஆனால் அவள் கொஞ்ச நாளில் தாலியை இழந்தாள். அதிலிருந்து இப்படித்தான்!’

‘தாலி! நல்ல தாலி! அந்த அடிமைக் கயிறு கட்டுவதாற்றானே எத்துணையோ பெண்கள் விதவை என்ற இழிந்த