பக்கம்:எக்கோவின் காதல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

27

பெயரைப் பெறுகிறார்கள். மக்கள் புரிந்தோ புரியாமலோ மீண்டும் படுகுழியில் விழுந்துகொண்டும், விழச் செய்து கொண்டும் இருக்கிறார்களே! இவர்கள் கண்கள் என்றுதான் திறக்குமோ!' என்று தனக்குத் தானே சொல்லிவிட்டு அவளை நோக்கி 'ஏன் அவளுக்கு மறுமணம் செய்யக்கூடாது' என்றான்.

'செய்யவேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். பெற்றோர் விரும்பவில்லை. மேலும் அவளும் சரியாக ஒப்புக்கொள்ளவில்லை!'

'பார்த்தாயா, மனித சமுதாயம் எப்படியிருக்கிறதென்று! உன் வீட்டிலேயே ஒருபுறம் துன்பத்தைத் தேக்கி வைத்துக் கொண்டு மறுபுறம் விழாக் கொண்டாட நினைக்கிறாய்' என்று வருந்திக் கூறினான்.

'என் பெற்றோர் கூட நான் சொன்னவுடன் ஒப்புக் கொண்டார்கள்; இவள் சரியான உடன்பாடு தெரிவிக்க வில்லையே; அதற்கு நாமென்ன செய்வது?’ என்றாள்.

'நாமென்ன செய்வதா? நன்றாக இருக்கிறது உன் கேள்வி! வீட்டிலே புரட்சி செய்ய முடியாவிட்டால் நாட்டிலே எப்படிப் புரட்சி செய்ய முடியும்? அவள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் நீ எடுத்துச் சொல்ல வேண்டும்’.

'நீங்கள்தான் இனிச் சொல்ல வேண்டும்'.

'சரி நானே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்'

அன்று மாலை எக்கோ, மாடியில் கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்த வண்ணம் அங்கு மிங்கும் நடந்து கொண்டிருந்தான். மல்லிகா வெளியிற்