பக்கம்:எக்கோவின் காதல்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

மனம் படபட என்று அடித்துக் கொண்டது. மூச்சு வெகு வேகமாயிற்று. சத்தம் வந்த பக்கம் மெதுவாகத் தலையைத் திருப்பினேன். ஏதோ வெள்ளையாக ஓர் உருவம் தெரிந்தது. படபடப்பு இன்னும் அதிகமாயிற்று 'பேயோ' என்று எண்ணினேன். 'குப்' என்று வியர்த்து விட்டது. வெள்ளை உருவம் வரவரப் பெரிதாகத் தெரிந்தது. அது என்னை நெருங்கி வந்துகொண்டிருந்தது நெஞ்சம் வெடித்து விடும்போல் இருந்தது. கூச்சல் போட எண்ணினேன். அனால் கேலி செய்வார்களே என்று எண்ணிக் கொண்டே எழுந்தேன். தலையணை தொப்பென்று கீழே விழுந்தது. விழுந்தவுடன் 'குடுகுடு' என்று ஒடும் சத்தம் கேட்டது. மறுபடியும் மாடிப்படியில் சத்தம். சே! இனிமேல் இங்கிருப்பது தவறு என்றெண்ணிக் கீழே இறங்கிவந்து திண்ணையில் படுத்துக் கொண்டேன்.

மறுநாட் காலை, 'மாடியில் பேய் நடமாட்டம் இருக்கும் போலிருக்கிறது' என்று அத்தையிடம் சொன்னேன்.

'அத்தான்! அதுதான் பயந்து போய்த் திண்ணையில் படுத்து விட்டீரோ?' என்றான் முருகன்.

‘எல்லாம் உனக்கு விளையாட்டுத் தானப்பா, நேரில் பார்த்தேன் - அப்புறமென்ன?'

'எதைப் பார்த்தீர்கள்? பேயையா!'

'ஆமாம்; பேயைத்தான். பன்னிரண்டு மணி இருக்கும். படியில் யாரோ ஏறிவருஞ் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பக்கத்தில் 'உஸ்ஸ்- உஸ்ஸ்' என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். வெள்ளையாக ஓர் உருவம் தெரிந்தது. வரவரப்