பக்கம்:எக்கோவின் காதல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

43

பெரிதாயிற்று. அதை என் கண்ணாரப் பார்த்தேன். அதன் பிறகுதான் இங்கு வந்து படுத்தேன்!

'அத்தான்! பேயுமில்லை பிசாசுமில்லை; வேறு எதையோ பார்த்து இருட்டிலே பயந்து விட்டீர்கள்!'

'முருகா! உனக்கு எப்போதும் விளையாட்டுத்தான். நான் நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுகிறேன். நீ - என்னவோ சொல்லுகிறாயே!'

'சரி அத்தான், உடனே விளக்கைப் போட்டுப் பார்த்தீர்களா?'

‘விளக்கைப் ...... போடவில்லை ...... அதை எதற்கு நாம் அவ்வளவு கவனிக்க வேண்டும் என்று பேசாமல் வந்து விட்டேன்'

'அத்தான்! அப்படியானால் அது உறுதியாகப் பேயில்லை. எதையோ பார்த்திருக்கிறீர்கள். இருட்டானதால் அது உங்கள் கண்ணுக்குப் பேய் போலத் தோன்றியிருக்கிறது. இதோ இதைப் படித்துப் பாருங்கள்'

'அது என்ன?' - என்று வாங்கிப் படித்தேன்:

"திருஷ்டாந்தரமாக, பேய் பிடித்த வீட்டின் சம்பவமொன்றை எடுத்துக் கொள்ளுவோம். பாதி இரவில் ஒரு சப்தம் கேட்டதாக இருக்கட்டும். இந்தச் சப்தம் யாரால் வந்தது? சாதாரணமாகக் காற்றால் சப்தம் உண்டாயிருக்கலாம். அல்லது ஏதாவது சாமான் விழுந்ததால் உண்டாயிருக்கலாம். அல்லது சப்தம் கேட்பது போல் எண்ணியுமிருக்கலாம். அல்லது காதின் பலவீனத்தால் சப்தத்தைக் கேட்ட மாதிரியிருக்கலாம்.