பக்கம்:எக்கோவின் காதல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

இத்யாதி காரணங்களால் சப்தம் என்ற சம்பவம் உண்டாவது சகஜம் ...... சப்தம் உண்டான காரணம் தெரியாதபடியால் பழக்க வாசனையால் அந்தச் சப்தம் தெய்வத்தாலோ. பேயாலோ, பிசாசாலோ உண்டாயிற்றென்று தீர்மானிக்கிறோம்.”

'இது என்ன பத்திரிகை? ...... சரிசரி! 'திராவிட நாடா' நீ எப்போ இதிலே சேர்ந்தாய்? இந்தக் கூட்டத்திலே சேர்ந்த நீ எங்கே பேய் பிசாசை நம்பப் போகிறாய்?'

'அத்தான்! சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குகிறது என்று பூரணமாக நம்பும் பண்டிதர் கூட்டத்தைச் சேர்ந்த நீங்கள் எங்கே நான் சொல்வதை நம்பப் போகிறீர்கள்!'

'சரி தம்பி! நேரமாகிறது, காப்பி சாப்பிட எழுந்திரு! அவன் அப்படித்தான் குறும்பாகப் பேசுவான். சாமியே இல்லை என்று சொல்கிறவர்களோடு கொஞ்ச நாளாய்ச் சேர்ந்திருக்கிறான்' என்று சொல்லி, என் அத்தை எங்கள் வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.

அன்று, இரவு வண்டிக்குப் புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

மூன்று மாதங்களை எண்ணிக்கொண்டேயிருந்தேன். இரண்டாம் பருவ விடுமுறையும் வந்தது. அத்தையின் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். ஊர்மிளாவைக் காண ஆவலோடு வந்தேன். அவளைக் காண முடியவில்லை. பாவாடை, தாவணியைத் தாங்கியிருந்தாலல்லவா அவளைப் பார்க்க முடியும். அவள் பருவநிலை, சேலைக்கு உறைவிடமாயிருந்தது. சமயற் கட்டில் அவள் அங்குமிங்கும் செல்லும் பொழுது அரைகுறையாகப் பார்த்துக்கொண்டேன். அவ்வளவு