பக்கம்:எக்கோவின் காதல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

'இல்லை என்று ஒருவரிடமும் சொல்லவில்லையே'

'தடை இல்லை என்றா?'

'இல்லை இல்லை; விருப்பம் இல்லை என்று சொல்லவில்லையே என்றேன் ...... சரி ...... போங்கள் ... அம்மா .......'

'போகிறேன். இரவு மாடிக்கு வருகிறாயா? சில செய்திகள் தனிமையில் உன்னிடம் சொல்லவேண்டும்’ என்றேன். அவளுடைய முறுவல் பூத்தமுகத்தை நாணம் வந்து கவ்விக் கொண்டது.

'ஊர்மிளா!' என்று அவள் முகத்தை நிமிர்த்தினேன்.

'வருகிறாயா?'

உடன்பாட்டைத் தலையசைப்பின் மூலம் தெரிவித்தாள்.

அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு. அத்தையும் வந்து விட்டார்கள். ஆனால் பாழும் அந்த இரவுதான் விரைந்து வரக் காணோம். அப்பொழுதுதான் இலக்கியத்திற் கண்ட ‘விரகதாபம்' இன்னதென்று உணர்ந்தேன்.

எப்படியோ இரவும் வந்துவிட்டது. நள்ளிரவும் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவள்தான் வரவில்லை. வந்துவிடுவாள் வந்துவிடுவாள் என்று என் இதயத் துடிப்பு ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டேயிருந்தன. அவள் வந்தால் எப்படிப் பேசவேண்டும், அக நானூறு முதலியவற்றிற் கண்ட இலக்கிய இன்பம் எவ்வாறுளது என்று காணவேண்டும் - என்றெல்லாம் கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன்.

மாடிப் படியில் சத்தம் கேட்டது. ஆம் அவள்தான் வருகிறாள் - மெதுவாகக் காலடியை எடுத்து வைத்து