பக்கம்:எக்கோவின் காதல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

தலை சுழன்றது. எவ்வளவுதான் சம்பளத்திலும் மற்ற வகையிலும் தமிழ் ஆசிரியன் தாழ்த்தப்பட்டிருந்தாலும், அவனுக்கும் மானம் மரியாதை உண்டல்லவா? அவனும் மனிதன்தானே! பணம் இல்லை - அழகில்லை - இப்படி ஏதாவது சொல்லியிருந்தால் பரவாயில்லை. 'தமிழ் வாத்தியார்' அட! அஃது என்ன அப்படிக் கேவலமான தொழிலா? கள்ள மார்க்கெட்டு - இலஞ்சம் - குடிகெடுத்துக் குபேரனாவது - இவற்றையெல்லாம் உயர்வாகக் கருதுகிறார்களோ? ஆம், பணந்தானே உயர்வு தாழ்வைப் படைக்கிறது. அஃது எந்த வழியால் வந்தாலென்ன! பணம் இல்லாத காரணத்தால் பாவம் 'தமிழ் வாத்தியார்' இவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான். போகட்டும்.

இவ்வளவு தாழ்வாக என்னைக் கருதும்போது எனக்கு இங்கென்ன வேலை? என்று ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குப்புறப்பட்டு விட்டேன். 'ரயிலி'ல் வரும்பொழுதுதான் ஊர்மிளாவின் நினைவே வந்தது. அடடா! அவளிடங்கூடச் சொல்லிக் கொள்ளாமல் வந்து விட்டோமே என்று வருத்தப் பட்டேன்.

ஆறு ஏழு மாதங்களாக நான் அங்கே போவதில்லை. ஒருநாள் திருமண அழைப்பு வந்தது. திருமண அழைப்பைப் பிரித்துப் பார்த்தேன். ஊர்மிளாவிற்கும் உலகநாதனுக்கும் திருமணம் என்றிருந்தது. என் சீற்றத்தைக் கையிலிருந்த அழைப்பிதழில் காட்டினேன்.

'ஊர்மிளா! என்னை ஏமாற்றி விட்டாய்! அன்று இரவில் கூறியதெல்லாம் பொய்தானா? அவ்வளவும் உண்மை என்று நம்பி விட்டேன். 'உங்களுக்குத்தான் என் உயிர் உடல் அனைத்தும் சொந்தம்' என்று கூறினாயே! இன்று