பக்கம்:எக்கோவின் காதல்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

பேய் என்னை கொல்ல இருந்தது. ஆனால் ஊர்மிளா என்னைக் காப்பாற்றினாள். இப்பொழுது உண்மையிலேயே என் அத்தை வீட்டில் பேய் இருக்கிறது. அது பணப்பேய் - இல்லை- பணப் பெருச்சாளி. அந்தப் பெருச்சாளி பேயாக மாறி அவளைக் கொன்றுவிட்டது. அவளை அந்தப் பேயிலிருந்து காப்பாற்றத் தவறிவிட்டேன். அவள் சந்தித்ததுபோல, நான் வரும் பொழுது அவளைச் சந்தித்திருந்தால் அவளைக் காப்பாற்றி இருப்பேன்.....

அவள் விருப்பப்படி அவளுடைய காதலனை அடைய தடுத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அந்தக் கொலைக் குற்றத்துக்கு உடந்தையாயிருந்து விட்டுச் சிவலோகமாம் - பிராப்தியாம் சொல்கிறார்கள் வெட்கமின்றி, அந்தச் சொற்களைப் பார்க்கப் பொறாத என் கண்கள் நீரை சிந்தி அந்த எழுத்துகளை அழித்துவிட்டன.

□ □ □