பக்கம்:எக்கோவின் காதல்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

63

சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் அல்லது கொளுத்த வேண்டும். அதன் பின்புதான் நீ குற்றவாளி இல்லை என்பதை மெய்ப்பிக்க முடியும்' என்று பரிந்து பேசினான்.

'நண்பா! அஃதிருக்கட்டும். நாங்கள் தோண்டிய ‘குழிக்கு' அவர்களிடம் 'மண்' கேட்டதால் அல்லவா அவர்கள் மறுத்தனர். நாங்களே முயன்று மண்ணை எடுத்துப் போட்டுக் குழியை மூடிவிட்டால் என்ன?

'அதுவும் நல்ல முடிவுதான். அதாவது நீங்கள் இருவரும் யாரும் அறியாமல் சென்று விடுவது என்றுதானே கூறுகிறாய்? ஆம்; அப்படிச் செய்வது தான் நல்லது. இல்லாவிட்டால் புனிதம் இறந்தாலும் இறந்துவிடுவாள்' என்று கூறி என் எண்ணத்தை உறுதியாக்கினான்.

வேலன் மரகதம் இருவரின் உதவியாலும் இன்பபுரிக்கு பயணம் ஆகிவிட்டோம்.

சில மாதங்கள் கழித்துவேலனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் படித்தேன். உடனே விடை எழுதினேன்.

என் வாழ்வைப் புனிதமாக்கிய தோழா நாங்கள் நலம். உன் கடிதம் கிடைத்தது. புனிதம் ஓடிவிட்டாள் என்று தூற்றுகிறார்களா? தூற்றட்டுமே! கண் மூடிக் கூட்டங்களுக்கு அதைத் தவிர வேறென்ன தெரியும். ஒரு நாள் தூற்றும். மறுநாள் போற்றும் அந்த நாற்ற வாய்கள். அதைப் பொருட்படுத்தக் கூடாது.

நண்பா! 'கண் மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்' என்ற உயிர் ஒலியை அன்று சொன்னாய். அந்த ஒலியே என் வாழ்வின் மூச்சாகவும் செய்தாய். அதற்கு எங்கள்