பக்கம்:எக்கோவின் காதல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்


”அஃது அவா தலைவிதி! அதுக்கு நாமென்ன பண்றது!"

"அந்தத் தலைவிதி சாதகத்திலே முன்னாடியே தெரியாதோ?” சரி சரி, சாதகத்தைப் பாருமையா!

“இது பேஷான சாதகமாச்சே”

"எதைச் சொல்கிறீர்! சீனிவாச முதலியார் வீட்டுப் சாதகத்தையா? சாதகம் நல்லாத்தான் இருக்கிறது. நல்ல அழகான நோட்டிலே அச்சுப் போல எழுதி இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு வயது பதினாறு ஆகிறதையா. கொஞ்சம் நிறமும் கூட மட்டம். அந்த ரத்தின முதலியார் வீட்டுச் சாதகத்தைப் பாரும். வயது பதின்மூன்றுதான்; பருவமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன; நல்ல சிவப்பு, அழகு; பணந்தான்..... அதைப் பற்றிப் பரவாயில்லை. அந்தச் சாதகத்தைப் பாரும் எப்படி என்று!”

"ஆஹாஹா! ஜாதகம்னா இதுன்னா ஜாதகம்! பேஷ் பேஷ்! என்ன பொருத்தம் போங்கோ முதலியார்வாள்! கட்டாயம் இதையே முடித்துக் கொள்ளுங்கள்.”

"சரி, நல்ல முகூர்த்த நாளொன்று பார்த்துக் சொல்லும்மையா!”

********

கோடீசுவரர் என்றாலே குந்தளபுரம் எங்கும் தெரியும். உண்மையிலேயே கோடிக் கணக்கில் பணம் உண்டு அவருக்கு. நல்ல அய்யர்களைக் கொண்டு சாதகங்கள் பார்க்கப்பட்டுச் சிறப்பான முறையில்தான் திருமணம் நடந்தது. நோயினாலும் பிள்ளைப் பேற்றாலும் இரு மனைவியர் இறந்தனர். மூன்றாம் மனைவி, பெற்றோர்கள் கட்டாயப்