பக்கம்:எக்கோவின் காதல்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 எக்கோவின் காதல் * கவியரசு முடியரசன்களைச் சொல்லாமற் சொல்லிக் கொண்டிருந்த அவள் கண்களைப் பார்த்துப் பரிவு கொண்டு துடித்துக் கொண்டுதான் இருந்தன.

ஒர் உள்ளம் சொல்லிற்று - "இதென்ன அநியாயம்! பெண்ணுக்கு வயது பதின்மூன்று. அவனுக்கு வயது அய்ம்பத்து மூன்று. எவ்வளவு வேற்றுமை! பணத்திமிர்தானே இப்படி யெல்லாம் செய்யச் சொல்லுகிறது?"என்று.

அதற்கு மற்றோருள்ளம்," இல்லை இல்லை; பெண்ணின் அப்பனது பண ஆசை தான் அப்படிச் செய்யச் சொல்லிற்று. இன்னும் பார்க்கப் போனால் சமுதாயத்தில் நிறைந்துள்ள முட்டாள் தனந்தான் அடிப்படைக் காரணம் என்று நான் சொல்வேன். இத்தகைய அறியாமையின் ஆணிவேர் களையப்படும் வரை, பெண்களின் வாழ்வு சிதைந்த வாழ்வு தான்; செல்லரித்து உளுத்துப் போன வாழ்வு தான்” என்று கூறிற்று.

ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தின் இரைச்சலிலே, இந்த இளம் உள்ளங்களின் துடிப்பு- அந்தத் துடிப்பிலிருந்து மேலெழும்பும் பெருமூச்சு யார் செவியில் விழப்போகிறது? விழுந்தாலும் அந்த மூச்சிலே தோய்ந்துள்ள வெப்பத்தை அறிந்து கொள்ளும் உணர்ச்சி ஏது அக் கூட்டத்திற்கு?

                       ★★★★★★★★★★

"மங்களம்! ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? அந்த அலமாரியில் குங்குமப்பூ இருக்கிறது அதை எடுத்துப் பாலில் கொஞ்சம் போட்டு எடுத்துக் கொண்டு வா!"

மங்களம் என்பது முதலியார் மனைவியின் பெயர். அந்தப் பெண்ணும் அப்படியே எடுத்து வந்தாள்.