பக்கம்:எக்கோவின் காதல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

69

“இதோபார்! வைரச் சங்கிலி, இதைக் கழுத்தில் போட்டுக் கொள்! இந்தா சாவிக் கொத்து; இது நகைப் பெட்டகத்தின் சாவி. எந்த நகை வேண்டுமோ எவ்வளவு பணம் வேண்டுமோ உன் விருப்பப்படி எடுத்துக் கொள்! நீதான் இங்கு அரசி!”

“சாவியை என்னிடம் நம்பிக் கொடுக்கிறீர்களே! நான் யாருக்காவது எதையாவது எடுத்துக் கொடுத்துவிட்டால்......!”

அட, பைத்தியமே! இதெல்லாம் உன் சொத்து; இதைக் காப்பதும் காப்பாற்றாததும் உன் பொறுப்புத் தானே” என்று கொஞ்சுதலாகக் கூறினார்.

“இங்கே வா! மங்களம்; இந்த “ரேடியோ”வைத் திருப்பப் பழகிப் கொள்! நானில்லாதபோது நீ திருப்பலாமல்லவா? இதை இப்படித் திருப்பிவிட்டால் போதும் உடனே பாடும்” என்று திருப்பினார்.

வானொலி பாடத் தொடங்கியது. “மன்மதன் லீலையை வென்றாருண்டோ” என்ற இசைத் தட்டின் பாட்டுக் கேட்டது. முதலியார் வயதையும் மறந்தார். இளமையைப் பெற்றார். அந்தப் பருவம் விளையாடத் தொடங்கியது.

முதலியாருக்குத் தனக்குத் தானே ஒரு சந்தேகம்; நமக்கு வயது அய்ம்பத்து மூன்று ஆகிவிட்டதே. அவள் பதின்மூன்று வயதுப்பெண். நம்மிடம் அன்பாக இருப்பாளா? நாம் தான் அவள் அன்பிற்கேற்ப நடந்து கொள்ள முடியுமா? என்று. இதற்காகத்தான் குங்குமப்பூ முதலியவற்றின் உதவியை நாடினார். தன்னால் இன்பந்தர இயலாவிட்டாலும், வைரநகை - பணம் வானொலி இவைகளாவது இன்பந் தரட்டும் என்று எண்ணித்தான்