பக்கம்:எக்கோவின் காதல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

அவனுக்கு மங்களம் அறிமுகப்படுத்தப்பட்டாள். தந்தை செயல் கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்த போதிலும் அவள் நடந்து கொள்ளும் முறையைக் கண்டு தன் தாயில்லாக் குறையை அவள் நிறைவேற்றுவாள் என்று மகிழ்ச்சியடைந்தான்,

அவள் அவனிடம் மிக அன்பாகப் பழகினாள். அவனுக்கு வேண்டியவற்றை ஒரு குறையும் இல்லாமல் செய்து வந்தாள். இருவரும் எவ்விதக் களங்கமுமின்றிப் பழகிவந்தனர்.

ஆனால் முதலியாருக்கு அஃது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அவனோடு அவள் சிரிப்பதும் பேசுவதும் அவருடைய உள்ளத்தில் வேரூன்றியிருந்த எண்ணத்திற்குத் தண்ணீர் வார்த்தது போன்றிருந்தது. என்ன செய்வது! ஒன்றும் சொல்லவும் முடியவில்லை , அவர்களை அப்படிப் பழக விடவும் மனமில்லை. உழன்று கொண்டிருந்தார்.

"மங்களம்! அந்தச் சாவிக் கொத்தைக் கொடு! வைர நகைகளை எப்பொழுதும் போட்டிருக்காதே. 'கெட்டு விடுமல்லவா! பெட்டியில் கழற்றி வைத்துக் கொள். பட்டுப் புடவைகளை நாள்தோறும் கட்டினால் எதற்காகும்? சாதாரணச் சேலைகளைக் கட்டிக் கொண்டாலென்ன? ஏதாவது “விசேடம்" வந்தால் அப்பொழுது கட்டிக் கொள்வது சரி” என்று முதலியார் கொஞ்சம் கண்டிப்பில் இறங்கி விட்டார்.

ஒரு நாள் பக்கத்தூருக்குச் சென்றிருந்தவர் மறுநாள் தான் வந்தார். வந்தவர் தன் மகன் அறையில் ஏதோ வேலையா நுழைந்தார். படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. அதில் மலர்கள்