பக்கம்:எக்கோவின் காதல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

73

சிதறிக் கிடந்தன. கச்சு ஒன்றும் கிடந்தது. முதலியாருக்கு வேல் கொண்டு குத்துவது போன்றிருந்தது. “கண்ணாடிமுகம்” தோன்றியது . வேரூன்றிய செடி பூத்துக் காய்க்கத் தொடங்கிவிட்டது.

“அடபாவி! இந்தக் காரியம் செய்யலாமா? உன் அப்பனுக்கும் மனைவி, உனக்கும் மனைவியா? ஒர் இரவு நானில்லை . இப்படி நடந்து விட்டதே! அடி சண்டாளி! உனக்குத்தான் இஃது அடுக்குமா? பாவ புண்ணியத்திற்குக் கொஞ்சமாவது அஞ்சினாயா? என்று துடிதுடித்தது அவருள்ளம்.

நேரே மாடிக்குச் சென்றார். நாற்காலியில் சாய்ந்தார் சிந்தனையில் ஆழ்ந்தார்.

“உனக்கு அடுக்குமா என்றா கேட்கிறீர்? சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்! என் வயதென்ன! உங்கள் வயதென்ன! என்னை மணந்து கொண்டது உமக்கு அடுக்குமா? சரி; பாவம் புண்ணியம் என்றெல்லாம் பேசுகிறீரே! அவற்றை நம்பி யிருந்தால் என்னை மணப்பது பாவம் என்று உங்களுக்கு ஏன் தெரியவில்லை ?”

“அடி பாதகி! அதற்காக மகன் என்று கூடவா பார்க்கக் கூடாது? இப்படி நடந்து விட்டாயே! நான் ஒருவன் மரம் போல இருக்கிறேன் என்பதையும் மறந்துவிட்டாயா?' “இல்லை! மறந்துவிடவில்லை! உண்மையில் நீங்கள் என் வாழ்வில் மரம் என்பதை நினைத்துத்தான் இப்படிச் செய்தேன். மகன் என்கிறீர்! யாருக்கு மகன்? அவர் வயதென்ன? யாராவது ஒப்புக் கொள்வார்களா? இல்லை - உங்களையும்