பக்கம்:எக்கோவின் காதல்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

மங்களம் அவர் கையைப் பிடித்துக் கொண்டு மாடிக்குச் சென்று விட்டாள்.

மணி நான்கு அடித்துவிட்டது.

முதலியார் மகன், கட்டிலின் கீழ் மறைந்து நடுங்கிக் கொண்டிருந்த தன் காதலியை மெதுவாக அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தான். வெளிக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு முதலியார் மாடிச் சன்னல் வெளியில் எட்டிப் பார்த்தார்.

தன் மகன் எதிர்த்த வீட்டுப் பெண் வசந்த கோகிலத்தை அங்கே கொண்ட போய் விட்டுத் திரும்புவதை வீதி வெளிச்சத்தால் பார்த்தார்.

அப்பாடா என்று திரும்பினார்.

அந்த மரம் - சந்தேக மரம் அடியோடு சாய்ந்தது. மனப்பாரம் குறைந்தது, பித்தமும் தெளிந்தது.

“மங்களம்! மங்களம்” என்றார். அப்பொழுது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்திருந்தது.