பக்கம்:எக்கோவின் காதல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
காக்கையின் கடிதங்கள்

பாரதிதாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் அன்று. பெருங்கூட்டம் . கடல்கடந்த தமிழர்கள் தமது தாய்நாட்டில் தோன்றிய - ஒப்பற்ற புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழாவைத் தமிழகத்தைவிட உயர்வாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தோடு சிங்கப்பூர்த் தெருக்களையெல்லாம் தோரணங்களாலும் காகிதப்பூக்களாலும் ஒரே அழகாக அலங் கரித்திருந்தார்கள். அன்று சிங்கப்பூர் புதுமாதிரியான அழகுடன் விளங்கியது. பலபேர் கவிஞரைப் பாராட்டினர்.

அவருடைய கவிதை நயங்களை-உவமைத்திறங்களையெல்லாம் சுவைபடப் பேசினார்கள். பேசும்பொழுது ஒருவர் “சுயமரியாதை கொள் தோழா!” என்ற பாட்டைப் பாடினார். அவ்வளவுதான் எனக்கு ஒரே குழப்பம். தலை சுழன்றது. முகம் கருத்தது. எனது மாற்றத்தைக் கண்ட என்மனைவி-இல்லைஎன் காதலி ஏன் இப்படிப் பித்து பிடித்தது போல் இருக்கிறீர்கள்? என்றாள். 'ஒன்றுமில்லை' என்று சொல்லி வியர்வையைத் துடைத்துக் கொண்டு வா போகலாம்' என்று புறப்பட்டு விட்டேன்.

அவளும் என்னுடன் வந்தாள். “ஏன் இப்படிப் பாதியிலேயே வந்து விட்டீர்கள்?” என்றாள்.