எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
97
இருவருமே சுவைப்போம். கல்வியழகை உணர்ந்தபிறகே நகையழகை மறந்தேன்.
அவர் பள்ளியிலிருந்து வரும்பொழுது 'காக்கை!' என்று அழைத்துக் கொண்டே வருவார்; 'வருக, வருக' என்று என் சிரித்த முகம் வரவேற்கும்.
காக்கை என்றதும் உனக்கு ஒன்றுமே புரியாது; அஃது என் பெயர். அவர் அருமையாக இட்ட பெயர். வள்ளி - ஆறுமுகம் பொருத்தமான பெயராயிருந்தாலும் அவருக்கு அது பிடிக்கவில்லை. அவர் பெயரை நக்கீரன் என்று மாற்றிக் கொண்டார். எனக்கும் காக்கை பாடினியார் என்ற பெயரைச் சூட்டினார். அதன் சுருக்கமாகத்தான் 'காக்கை! என்று என்னை அன்போடு அழைக்கிறார்.
லில்லி, ரோசு, ரமணிபாய் என்ற இந்தப் பெயர்களை விட எனக்குக் காக்கை என்ற பெயர் மிகமிகப் பிடித்திருக்கிறது.
இங்ஙனம்
காக்கை பாடினியார்.
இந்தக் கடிதங்கள் படிக்கப் படிக்கச் சுவையாக இருந்தன. மேலும் படித்தேன்.
அம்மா!
இருவரும் நலமே. உங்கள் கடிதத்தில் கடவுள் எனக்கு நன்னிலையைக் கொடுத்தார் என்று எழுதியிருந்தீர்கள். அந்த நிலையைக் கடவுளும் கொடுக்கவில்லை, யாருங் கொடுக்கவில்லை. அவருடைய முயற்சியும் என் அறிவுந்தான் எங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம். கடவுள் கொடுத்ததாயிருந்தால் பணத்தைக் கொடுத்திருக்கலாமே! இன்னும் அவர் சம்பளம்