பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

உடனே நான் முயல் குட்டியை நோக்கித் தாவினேன். அது வெகு வேகமாக ஓடியது. ஆனால், நானா விடுவேன்? துரத்திச் சென்று ஒரே பாய்ச்சலில் அதன்மேல் பாய்ந்தேன். கழுத்தைப் பிடித்துப் பலமாகக் கடித்தேன். அவ்வளவுதான்; முயல் குட்டியின் மூச்சு நின்றுவிட்டது !

“சபாஷ், இப்படித்தான் வேட்டையாட வேண்டும். முயல், மான் முதலிய மிருகங்களாக இருந்தால், குரல்வளையில் கடித்துக் கொல்ல வேண்டும். ஆனால், காட்டு எருமை போன்ற பெரிய மிருகங்களை எப்படித் தாக்கவேண்டும், தெரியுமா? ‘லபக்’கென்று மேலே பாய வேண்டும். உடனே பலமாகப் பிடரியிலே கடித்துக் கழுத்தை முறிக்க வேண்டும்” என்றாள் என் அம்மா.

“ஓ, அப்படியா! சரி அம்மா. இப்போது இந்தப் பக்கமாக ஒரு காட்டு எருமை வரட்டும். நான் அதை என்ன பாடு படுத்துகிறேன், பார்” என்றள் என் தங்கை.

“என்ன! அது அவ்வளவு எளிதான காரியமா? நானும், உங்கள் அப்பாவும் சேர்ந்து தாக்கினல் கூட சில சமயம் காட்டு எருமை தப்பித்துக் கொண்டுவிடுமே ! காட்டு எருமை பொல்லாதது. அதனிடம் இப்போது போகாதீர்கள்!” என்று அம்மா சொன்னாள்.

“சரி அம்மா” என்று தலையை ஆட்டினாள் என் தங்கை, பிறகு நானும் என் தங்கையும் முயல் குட்டியைப் பங்கு போட்டுத் தின்றோம்.

எனக்கு மூன்று வயதானதும் பிடரி மயிர் வளர ஆரம்பித்தது. ஆறாவது வயதிலே நன்றாக வளர்ந்துவிட்டது. ஆனால், என் தங்கைக்குப்-