பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

பிடரி மயிர் வளரவில்லை. எங்களில் ஆணுக்குத்தான் பிடரி மயிர் உண்டு. பெண்ணுக்குப் பிடரி மயிர் கிடையாது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!

இப்போது எனக்கு வயது பன்னிரண்டு. நானும் என் அம்மா அப்பாவைப் போல், நன்றாக வளர்ந்து விட்டேன்; தைரியமாக வேட்டை ஆடுவேன். சூரியன் மறையும் சமயம் நான் ஒரு சத்தம் போடுவேன். என்னுடைய அந்தக் கர்ஜனையைக் கேட்டுக் காடு முழுவதும் கிடுகிடுக்கும். சிறிய மிருகங்களெல்லாம் நடுநடுங்கி நாலா பக்கமும் நாலுகால் பாய்ச்சலில் ஓடும். நான் தரையை நோக்கி எவ்வளவுக்கு எவ்வளவு குனிந்து கர்ஜிக் கிறேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு சத்தம் வெகு துாரம் கேட்கும்.

பயங்கரமான கர்ஜனை, கம்பீரமான தோற்றம் இவைகளுடன், ஓர் உயர்ந்த குணமும் எங்களிடம் உண்டு. நான் பசித்தால்தான் மற்ற மிருகங்களை வேட்டையாடுவேன். தேவையில்லாத போது, எந்த மிருகத்திற்கும் தொந்தரவு கொடுக்க மாட்டேன். ஆனால், எனக்கு யாரும் தொந்தரவு கொடுத்தால், சும்மா விடமாட்டேன். மணிக்கு ஐம்பது மைல் வேகத்தில் ஓடிப் பிடித்து விடுவேன்! இந்தக் குணங்களெல்லாம் எங்களிடம் இருப்பதால்தானே மிருக ராஜன் என்று நீங்கள் அழைக்கிறீர்கள்? இல்லாதபோனால், புலி அல்லது யானைக்கு அந்தப் பெயரைக் கொடுத்திருக்க மாட்டீர்களா ?

காற்று பலமாக அடிக்கும் சமயம், நான் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேன். நல்ல