பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

அல்லது சீறுகிறோம் என்று நினைப்பீர்கள். ஆனால், உண்மையில், நாங்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தவே அப்படிக் கர்ஜிக்கிறோம்.

நாங்கள் கோபமாயிருக்கும் போது அல்லது பசிக்கும்போதுதான் கர்ஜிக்கிறோம் என்று சிலர், கூறுகிறார்கள். பசி அடங்கியவுடனும் நாங்கள் கர்ஜனை செய்வதுண்டு. நிறையச் சாப்பிட்ட பிறகு நீங்கள் ஏப்பம் விடுகிறீர்களே, அதே போலத்தான்! ஆனால், வேட்டையாடும்போது நாங்கள் கர்ஜனை' செய்யவே மாட்டோம்.

நான் வேட்டையாடப் போகும்போது, என் பின்னாலே சிறிது தூரத்தில் ஒரு மிருகம் வருவதுண்டு. அதன் பெயர் கழுதைப் புலி. அதன் மாமிசம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதனால்தான் அது அப்படித் தைரியமாக வருகிறது. எதற்காகத் தெரியுமா? நான் கொன்று தின்னும் மிருகத்தில் மிச்சம் ஏதாவது இருந்தால், அதைத் தின்பதற் காகத்தான்!

இவ்வளவும் சொன்னேன். ஆனால், நான் எங்கு, பிறந்தேன் என்பதைச் சொல்ல மறந்தே போய்விட்டேனே! நான் பிறந்தது வடநாட்டில் குஜராத்திலுள்ள ‘கிர்’ வனப் பகுதியில்தான். இந்தியாவிலே அந்த ஓரிடத்தில்தான் இப்போது எங்கள் இனம் இருக்கிறது. பஞ்சாப், ராஜபுதனம் முதலிய இடங்களில்கூட முன்பு இருந்ததாம், இப்போது அங்கெல்லாம் இல்லை. அழித்துவிட்டார்கள்.

ஆப்பிரிக்காவில் பல இடங்களில் எங்கள் இனம் இருக்கிறது. ஆனால், இந்தியச் சிங்கமாகிய எனக்கும், ஆப்பிரிக்கச் சிங்கத்திற்கும் முக்கியமான ஒரு வேற்றுமை உண்டு. என்னை விட