பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

‘ஒன்று...இரண்டு...மூன்று' என்று சொல்லுங்கள். உடனே பாருங்கள். அந்த மனிதரின் தலை

மயிரில்கூட என் கால் படாதபடி ஒரே மூச்சில் அவரைத் தாண்டிவிடுவேன். உடனே நீங்கள் எல்லாம் என்ன செய்வீர்கள் ? பலமாய்க் கை தட்டுவிர்கள். இதோ என் பின் பக்கம் பாருங்கள். தடித்து நீண்ட வால் இருக்கிறது. உட்காரும் போதும், தாவும் போதும் இந்த வால் எனக்கு எவ்வளவு உதவுகிறது, தெரியுமா? நான் உட்காரும் போது தரையில் உட்காரமாட்டேன். இந்த வாலையும், பின் கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்துக்கொள்வேன். அசல் முக்காலிபோல் இருக்கும். அந்த, முக்காலி மீதுதான் நான் உட்கார்ந்து கொள்வேன். குதித்துக் குதித்துச் செல்லும் போது, இந்த வாலைப் பின் பக்கமாக நீட்டி வைத்துக் கொள்வது என் வழக்கம். இந்தப் பக்கம், அந்தப் பக்கம் நான் சாய்ந்து விடாமல் இருக்கவும், வேண்டிய பக்கம் திரும்பவும் துடுப்பைப் போல் இது உதவுகிறது.

வாலையும், காலையும் பற்றியே நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் என் வயிற்றையே