பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

重台 பார்க்கிறிர்களே! ஒகோ புரிகிறது, புரிகிறது. என் வயிற்றிலுள்ள பைக்குள்ளிருக்து எட்டி எட்டிப் பார்க்கிறதே ஒர் உருவம், அதைத்தானே இப்ப டிக் கண் கொட்டாமல் பார்க்கிறீர்கள் ? கன்ருகப் பாருங்கள், பாருங்கள். இது என் குழந்தைதான். ஐந்து மாதங்களுக்கு முன்பு இது பிறந்தது. இப்போது இதன் உயரம் ஒன்றரை அல்லது ஒன்றே முக்கால் அடி இருக்கும். ஆதல், பிறந்த வுடனே எவ்வளவு உயரம் இருந்தது, தெரியுமா? சொன்னுல் கம்பமாட்டீர்கள். சரியாக ஒர் அங் குலம்தான் ஆம், ஒரே அங்குலம்தான்! நானுே ஆறடி இருக்கிறேன். எனக்குப் பிறந்த குழந்தை ஓர் அடியாவது இருக்க வேண்டாமா? என்ன செய்வது ? ஆறடி அம்மாவுக்கு அங்குலக் குழந்தை' என்று உங்களுக்குப் பாடத் தோன்றுகிறதா ? சரி, பாடிவிட்டுப் போங்கள். பிறந்தவுடனே இந்தப் பிள்ளையை என் உதடு களால் மெதுவாகத் துக்கி இந்தப் பைக்குள்ளே வைத்தேன். உயரம் ஓர் அங்குலமாக இருக்கும் போது, கான் தரையிலே விட முடியுமா? புல் பூண்டுகளுக்குள் அகப்பட்டுக் கொண்டுவிட்டால் என்ன செய்வது? தேடிக் கண்டுபிடிப்பதே சிரம மாகிவிடுமே ; அதனுல், கொஞ்ச காலம்வரை இதைத் தரையில் விடுவதே இல்லை. எப்போதும் இந்தப் பைக்குள்ளே பத்திரமாக வைத்திருப்பேன். உங்கள் ஆசிரியர் சட்டைப் பைக்குள் சாக்குக் கட்டியை வைத்திருப்பாரே, அதே போலத்தான் இதையும் என் பைக்குள்ளே வைத்திருப்பேன்.