பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

________________

23 சிறிது தூரத்தில் போவதைக் கண்டேன். பார்த் ததுமே, அது என்ன என்பதைத் தெரிந்து! கொண்டுவிட்டேன். அதுதான் மான்! என் அப்பா இரண்டு மூன்று தடவைகள் மானைக் கொன்று குகைக்குள்ளே இழுத்துவந்திருக்கிறார். அது ஓடிச் சென்ற சிறிது நேரத்தில், மற்றோர் உருவம் அந்த வழியாகப் போனது. அது ஒரு விசித்திரமான பிராணியாக எனக்குத் தெரிந்தது. -- இது என்ன பிராணி? இதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. ஆலுைம், இரண்டு கால் களாலே நடக்கிறதே! மற்ற இரண்டு கால்களில், ஒரு காலில் நீளமாக, கறுப்பாக ஏதோ வைத்தி ருக்கிறது. இன்னொரு காலை - வீசி வீசிக் கொண்டே செல்கிறதே ! என்று நினைத்தேன். -அந்த விசித்திரப் பிராணியின் தலை மறையும் - வரை ஒளிந்து பார்த்துக்கொண்டே நின்றேன்'. சிறிது நேரத்தில் திரும்பவும் - 'படார்' என்று பலத்த ஒரு சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் என்னை அறியாமலே ஒரு பயம் ஏற்பட்டது. உடம்பு நடுங்கியது. உடனே நான் ஒரு விநாடி கூட அங்கே நிற்க வில்லை. ஒரே ஓட்டமாகக் குகையை நோக்கி ஓடி வந்துவிட்டேன். ' பயத்தோடு தான் ஓடி வருவதைக் கண்டதும், என்ன! என்ன?” என்று என் தம்பியும் தங்கையும் கேட்டார்கள். நடந்ததை நான் சொன்னேன்.