பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

 25

  அம்மா எங்களுக்கு அன்போடு பால் ஊட்டி வளர்த்தாள். நாங்கள் பாலைக் குடித்துவிட்டு ஒரு வர் முதுகில் ஒருவர் ஏறி விளையாடுவோம். ஒரு வரை ஒருவர் தள்ளி விளையாடுவோம். சில சமயம் எங்கள் விளையாட்டு வினையாகிவிடும் ! அப்போது அம்மா, உர்...உர்...' என்று மிரட்டி எங்களை அடக்குவாள்.
   நாங்கள் பிறந்து சில நாட்கள் வரை அம்மா எங்களுடனேயே குகையில் இருந்தாள். அப்பா மட்டும்தான் இரை தேடப் போவார். அவர் சில சமயம் மிருகங்களைக் கொன்று அப்படியே இழுத் துக்கொண்டு வருவார். சில சமயம் சாப்பிட்டு விட்டு மிச்சத்தைக் கொண்டு வருவார். சிறு வயதில் தாய்ப் பாலைத் தவிர எங்களுக்கு என் பெற்ருேர்கள் எதுவுமே கொடுக்க மாட்டார்கள். காள் ஆக ஆகக் கொஞ்சம் கொஞ்சமாக மாமிசத் துண்டுகளைக் கொடுத்து எங்களைப் பழக்கினுள் அம்மா.
  

எங்களுக்கு ஒரு வயதானது. அப்போது அப்பாவும் அம்மாவும் எங்களைத் தினமும் காட்டுக் குள்ளே அழைத்துச் செல்வார்கள். எல்லோரும் அடர்ந்த புதர் மறைவில் மறைந்து நின்று கொள்வோம். சமயம் பார்த்து, அப்பாவும் அம்மா வும் அந்தப் பக்கமாக வரும் மிருகங்களின் மேல் டாய்ந்து, பிடரியைக் கடித்துக் கொதறுவார்கள். அப்படித்தான் வேட்டையாட வேண்டும் என்று எங்களுக்கும் அம்மா சொல்லித் தருவாள்.

   ஒரு நாள் சிறிது துரத்தில் ஒரு மிருகம் போவதைப் பார்த்தோம். உடனே அம்மா,".அதோ பார். அது பொல்லாத பிராணி.