பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29 ஒரு சமயம், ஒரு மனிதன் மரத்திலே ஒளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டேன். உடனே வேகமாக அவனை நோக்கித் தாவினேன். 20 அடி உயரம் என்னுல் தாவ முடியும். உயரத் தாவி ஒரு கிளையிலே தொத்திக் கொண்டேன். அப்புறம் என்ன? அவன் கதி அதோ கதிதான் ! சிங்கத்தை மிருகராஜன், மிருகராஜன் என்று அழைக்கிறீர்கள். ஆனுல், சிங்கத்தைவிட எனக்குப் பலம் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் நல்லது. தெரியாத போனுல், இப்போதாவது தெரிந்து கொள் ளுங்கள். எங்கள் இனத்தை ஆசியாக் கண்டம் ஒன்றில் தான் பார்க்க முடியும். அதிலும், இந்தியா, பர்மா, ஜாவா, சுமத்திரா முதலிய நாடுகளில்தான் காண லாம். இலங்கையில்கூடக் காண முடியாது. எங்களிலே சிலர் கிழடாகி யிருப்பார்கள். சிலருக்கு உடம்பிலே காயம் பட்டிருக்கும். அப் போது அவர்களால் ஓடி ஆடி இரை தேட முடி யாது. அதனுல் அவர்கள் ஊருக்குள்ளே புகுந்து: ஆடுமாடுகளையும், மனிதர்கள் அகப்பட்டால் அவர் களையும் கொன்று தின்பதுண்டு. காட்டிலே சரி யான இரை கிடைக்காதபோனுலும் இப்படித்தான் செய்வோம். வேறு வழி ? நான் இன்னும் கிழடாக வில்லை. கிழடாகி விட்டால், உடம்பில் வலு இருக்காது. இரை தேடு வது கஷ்டங்தான். அதற்காக கான் பட்டினி கிடந்து சாகமாட்டேன். அருகிலுள்ள கிராமத் துக்கு இரவு நேரத்திலே செல்வேன். ஆடுமாடு