பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கிறார்கள். இவை மட்டுமா? ஓவியர்கள் உபயோகப் படுத்துகிறார்களே தூரிகை, அதற்கும் என் உரோமம் உதவுகிறது. என் சாணத்தை கூட அரேபியர்கள் விடுவதில்லை. வறட்டி தட்டி எரிக்கிறார்கள். அரேபியர்களில் சில பொல்லாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் இனத்தவரைக் கொன்று, மாமிசத்தையும் தின்று விடுகிறார்கள்!

செத்த பிறகு கூட நாங்கள் உபயோகப்படுகிறோம்.எங்களுடைய தோலைப் பதனிட்டு, பைகள், குல்லாக்கள் செய்கிறார்கள். தந்தத்தைப் போல் எங்களுடைய எலும்பிலும் பல சாமான்கள் செய்கிறார்கள்.

என் முதுகைப் பாருங்கள். எனக்கு ஒரே ஒரு திமில்தானே இருக்கிறது? சில ஒட்டகங்களுக்கு இரண்டு திமில்கள் இருக்கும். ஆனால், அவற்றை நான் பிறந்த அரேபியப் பாலைவனத்திலே முடியாது. சைனாவிலும் சைபீரியாவிலுமே காணலாம். அவை எங்களைவிடக் குள்ளமாகவும், குண்டாகவும் இருக்கும். கால்களும் குட்டையாக இருக்கும். அங்கெல்லாம் மலைகள் அதிகம். கால்கள் குட்டையாக இருப்பதால், மலை மேல் ஏறுவது சுலபம். ஆனால், எங்களைப் போல் மணல் வெளியில் நடப்பதற்குக் குட்டைக் கால்களை விட நெட்டைக் கால்கள் தான் வசதியாயிருக்கின்றன. அதனால்தான், எங்களுடைய கால்கள் நெட்டையாயிருக்கின்றன.

எங்களுடைய உரோமத்தைவிட அவைகளின் உரோமம் அடர்த்தியாயிருக்கும். காரணம், அவை வசிக்கும் இடங்களில் அடிக்கடி குளிர் காற்று