பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பழக்கமில்லை.ஆனாலும், எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் நன்றாகச் சண்டை போடுவார்கள். இந்தப் பக்தயத்தில் வெற்றி பெறும் ஒட்டகத்தின் எஜமானருக்குப் பரிசு கிடைக்கும். என்ன பரிசு தெரியுமா? ஒரு கழுதைதான் பரிசு!

குதிரைச்சவாரிசெய்யும்போது, நீங்கள் கால்கள் இரண்டையும் இருபுறமும் தொங்கவிடுகிறீர்கள். ஆனால், எங்கள் மேல் அப்படி உட்கார்ந்து சவாரி செய்யமாட்டார்கள். திமிலில் அமர்ந்து கால்கள் இரண்டையும் பிடரியில் வைத்துக் கொள்வார்கள்.

என் முதுகில் ஏறிச் சவாரி செய்ய உங்களுக்கும் ஆசையாயிருக்கிறதா?இதோ நான் தயார்.ஆனால்,குதிரைச் சவாரி போல் இந்தச் சவாரியும் சுகமாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்! மிகவும் அசெளகரியமாயிருக்கும். இப்படியும் அப்படியும் அசைந்து அசைந்து நான் செல்வதால், புதிதாகச் சவாரி செய்பவர்களுக்கு மயக்கம்கூட வந்துவிடும்! “மயக்கம் வங்தால் வரட்டுமே!” என்கிறீர்களா?சரி,வாருங்கள். தங்கள் வரவு நல்வரவாகுக!