பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43 அப்படி அனுதாபப் படுகிறவர்கள் என்னுடன் ஒட்டப் பக்தயம் வந்து பார்க்கட்டும். மணிக்கு 25 மைல் வேகம் ஒடுவேன் நான் ! : சகதியில் படுத்துப் புரளுவதென்ருல் எனக் குக் கொண்டாட்டம்தான். சந்தனம் பூசுவது போல் சகதியை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு தரையிலே விழுந்து புரளுவேன். புழுதியெல் லாம் உடம்பில் ஒட்டிக்கொள்ளும். இப்படி கான் செய்யாவிடில், சில பூச்சிகள் என் உடம்பில் ஏறி, மடிப்புக்குள் புகுந்துகொண்டு அங்கேயே குடி யிருக்க ஆரம்பித்து விடுகின்றன ! என்னைத் துங்கவிடாமல் அந்தப் பூச்சிகள் கறுக், நறுக் கென்று கடித்துத் தொந்தரவு செய்கின்றன. சில சமயங்களில் எனக்குச் சகதி அகப்படாது. அப்போது இந்தப் பூச்சிகள் என்னைப் படாத பாடு படுத்தி விடும். அந்த மாதிரிச் சமயங்களில் எனக்கு உதவியாகச் சில பறவைகள் வரும். அவை என் உடம்பில் உட்கார்ந்துகொண்டு, மடிப்புகளுக்குள் மறைந்து கொண்டிருக்கும் பூச்சி களைக் கொத்திக் கொத்தித் தின்னும். இந்தப் பறவைகள் எனக்கு இன்னுெரு உதவி யும் செய்கின்றன. எதிரிகள் துரத்தில் வரும் போதே இவை பார்த்து விடுகின்றன. உடனே இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கத்தத் தொடங்குகின்றன. பார்வை மங்தமாக உள்ள எனக்கு இது எவ்வளவு உதவியாயிருக்கிறது, தெரியுமா? உடனே நான் எதிரியை எதிர்க்கவோ அல்லது எதிர்த் திசையில் ஒடவோ தயாராகலாம் அல்லவா ?