பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46 எனக்குத் தெரிந்துவிடும். அடிக்கடி கழுத்தை காலா பக்கமும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொள்வேன். கான் தண்ணிர் குடிப்பதை எப்போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது உங்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும். ஆடு மாடு குடிப்பது போல் கான் குடிக்கமாட்டேன். என் முன்னங் கால்கள் இரண்டையும் அகல வசத்தில் பரப்பி வைத்துக் கொள்வேன். கன்ருகக் கீழே குனிந்து நீரைக் குடிப்பேன். முன்னங் கால்களே அப்படி வைத்துக் கொள்ளாதபோனுல், என் வாய்க்குத் தண்ணிர் எட்டவே எட்டாது. தரையிலுள்ள புல் பூண்டுகளைத் தின்னும் போதுகூட இப்படித்தான் செய்வேன். - என் கால்களுக்குப் பலம் அதிகம். எதிரிகள் தப்பித் தவறி என் அருகிலே வந்துவிட்டால், உடனே கான் என்ன செய்வேன், தெரியுமா? கடிக்க மாட்டேன், முட்டமாட்டேன். கழுதையைப் போல் பட், பட் டென்று பலமாகக் கால்களால் உதை கொடுப்பேன். என் உதை தாங்காமல் சுருண்டு விழுந்த எதிரிகளுக்குக் கணக்கே இல்லை! این سه - میرش கான் பிறந்ததும் வளர்ந்ததும் ஆப்பிரிக்கா வில்தான். அங்குள்ள வறண்ட பிரதேசத்தில்தான் என் இனத்தைக் காணமுடியும். உலகத்தில் வேறு எந்தக் காட்டில் தேடினுலும், நாங்கள் அகப்பட மாட்டோம். தனியாக வாழ்வதற்கே எங்களுக்குப் பிடிக்காது. கூட்டம் கூட்டமாகவே வசிப்போம். பதினேக்து முதல் எண்பது வரை உள்ள பல கூட்டங்களைக் காணலாம்.