பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54 கும். தாயும் தன் குட்டியை வாலால் இழுத்துக் கொண்டே போவாள். தானே கடப்பது பாதி, தாயார் இழுப்பது பாதி-இப்படியே ஆபத்தி லிருந்து குட்டிகளும் எங்களோடு தப்பித்துக் கொள்ளும். குறுக்கே ஆறு வந்தால், கவலைப் படமாட் டோம். எங்களுக்குத்தான் கன்ருக நீந்தத் தெரி யுமே வேகமாக நீந்தி அக்கரை போய்விடுவோம். இவ்வளவு பெரிய உடம்பைத் துக்கிக்கொண்டு எப்படித்தான் நீங்துகிறதோ! என்று ஆச்சரியப் படுகிறீர்களா? செங்குத்தான பாதையில் நாங்கள் ஏறி இறங்குவதைப் பார்த்தால், இன்னும் ஆச்சரி யப்படுவீர்கள். மிகவும் சரிவான இடங்களில், காங்கள் கால்களைப் பரப்பிக் கொண்டு வயிற்ருல் ககருவதைப் பார்த்தால், மேலும் மேலும் ஆச்சரிய மாயிருக்கும்! என் கண்ணேப் பார்த்து, இவ்வளவு பெரிய யானைக்குக் கோலிக் குண்டு போலக் கண் இருக் கிறதே! என்று பல சிறுவர்கள் வியப்படைகி ருக்கள். கண் சிறிதாக இருப்பதால், பார்வையும் கொஞ்சம் மந்தம்தான். கண் சிறிதாயிருந்தாலும், காது எவ்வளவு பெரிதாக இருக்கிறது, பார்த் திர்களா ? முறம் போல் இருக்கிறதல்லவா ? கண், காது இவைகளைவிட எனக்கு மிகவும் அவசியமான பாகம் மூக்குத்தான். என்னுடைய மூக்கு மிக மிக நீளம். மூக்கா அது எங்கே இருக் கிறது ?’ என்று கேட்கிறீர்களா? முக்காகவும், கையாகவும் எனக்கு உபயோகப்படும் துதிக்கை தான் அது என் துதிக்கையின் நுனியில் உங் களுக்கு இருப்பதுபோல் ஐந்து விரல்கள் இல்லை.